எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை ஒன்றை சில்லறை விலையில் 30 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை விலையிலும் 55 கிராமுக்கு மேல் உள்ள பெரிய முட்டையை 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்தார்.
பெரும்பாலும் சந்தையில் இந்த விலைக்கே முட்டைகள் கிடைப்பதாகவும், முட்டைகளை இந்த விலைக்கு மேல் வாங்க வேண்டாம் எனவும் நுகர்வோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.