தற்சமயம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இதன் மைய அமுக்கம் 1004 மில்லி பார் ஆக உள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காற்றத்தழுத்தமானது இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 17ம் திகதி இலங்கையின் வடக்கு மற்றும் தமிழக கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்வரும் 18ம் திகதி அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் மகாபலிபுரம் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது அதனை விட தீவிரமாக மாறி கரையைக் கடக்கும் என மேலும் எதிர்வு கூறியுள்ளார்.