இலங்கையின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் விதத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பை
தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்வதுடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழையின் பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.