இன்று (14) அதிகாலை அநுராதபுரம் (Anuradhapura) பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பிரதேசத்தில் தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த சிறிய லொறி ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில், சிறிய லொறியில் பயணித்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களில் ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நால்வரும் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.