இலங்கை அரசாங்கம் விரைவில் வாகன இறக்குமதியை மீண்டும் அனுமதிக்க உள்ளது. ஆனால், இது முழுமையான அனுமதி அல்ல. நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி அனுமதிக்கப்படும். இந்த முடிவு அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி குறித்த முடிவு எடுக்கும் போது, நாட்டின் நிதி நிலைமை மற்றும் கையிருப்பு ஆகியவை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுமெனவும் சில நிறுவனங்கள் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புகின்றன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.