தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமையின் காரணமாக, அந்த கடற்பரப்புகளில் காற்று மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
இந்த இவ்வளவு வேகத்தில் காற்று வீசுவதால், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். இதனால், மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.