வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை பலவீனமடைந்து வருகிறது. இந்தியாவை நோக்கி காற்று வீசுவதால் இது மேலும் வலுப்பெறாமல் இருக்கிறது. இதனால் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் மட்டுமே மழை பெய்யும். மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கூறியதாவது, வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுக்கு அருகே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது பலவீனமடைந்து வருகிறது. இந்தியாவை நோக்கி காற்று வீசுவதால் இந்த தாழமுக்கம் வலுப்பெறாமல் இருக்கிறது. இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 30-50 மில்லி மீற்றர் வரை மழை பெய்யலாம். காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.