வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.