தற்போது வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் காற்று சுழற்சி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய மழை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. வங்காள விரிகுடாவில் 07 ஆம் தேதி புதிய காற்று சுழற்சி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 19 ஆம் தேதி மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்விரு காற்று சுழற்சிகளும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கு அருகில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 09 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிதமான முதல் கனமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 11 முதல் 15 ஆம் தேதி மற்றும் 21 முதல் 25 ஆம் தேதி வரை சில பகுதிகளில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடலில் செல்லும் தொழிலாளர்கள் 09 ஆம் தேதி முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.