நாட்டில் கடந்த நாட்களாக எரிவாயு, எரிபொருள், பால் மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொருட்களுக்கு அவசியமற்ற தேவை காணப்படுகின்றது. இந்நிலையில் சந்தையில் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் மாற்றுப் பொருட்களை கொள்வனவு செய்வது அவசியம் எனவும் மாற்றுப் பொருட்களை உட்கொள்ள பழகுவதன் மூலம் பணமும் மீதமாகும் எனவும் வாடிக்கையாளர் விவகார மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சந்தையில் சில காரணங்களால் தட்டுப்பாடு ஏற்படும் போது, மக்கள் அந்த பொருளை தேக்கி வைக்க முற்படுவதால், அதற்கான தேவை செயற்கையாக அதிகரிக்கிறது. இது விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
தட்டுப்பாடு ஏற்படும் பொருளுக்கு மாற்றுப் பொருட்களை தேர்ந்தெடுப்பது, விலைவாசி கட்டுப்பாட்டில் வைக்க உதவும். மேலும், இது பொருளாதாரத்தையும் சமநிலைப்படுத்தும் என பண்டார சுட்டியுள்ளார்.